Tuesday, May 22, 2018

போயன் ஆலயம் - கம்போடியா



போயன் ஆலயம். 7ம் நந்திவர்மன் 12ம் நூ கட்டிய பௌத்த ஆலயம்.

கம்போடியாவின் அங்கோர் வளாகத்தில் உள்ள மற்றுமொரு பிரமாண்டம்.






Friday, May 18, 2018

கம்போடிய சியாம் ரீப் பெண் நாட்டார் தெய்வ வழிபாடு



தமிழ் பாரம்பரியத்தில் நாட்டார் தெய்வங்களைச் சிறப்பு செய்வது போல...
கம்போடிய சியாம் ரீப் நகரில் உள்ள பௌத்த மடாலயம் ஒன்று. இங்கு 2 பெண் தெய்வங்கள் வழிபடப்படுகின்றனர். கியான் செ, கியான் சோம் என்ற இரு தெய்வங்கள்.

Monday, March 26, 2018

ஒடிஷாவின் பௌத்தச் சுவடுகளைத் தேடி

 


ஒடிஷாவின் பௌத்தச் சுவடுகளைத் தேடிய பயணமாக நண்பகல் தொடங்கி எனது முதல் நாள் பயணம் அமைந்தது. 

கொளுத்தும் வெயில். சுட்டெரித்து விட்டது. ஆனாலும் இன்று கண்ட காட்சிகளும் அறிந்து கொண்ட விசயங்களும் மிக அற்புதமானவை.  பிரம்மாண்டமானவை.

புவனேஸ்வர் நகரிலிருந்து காலை 11 மணி வாக்கில் புறப்பட்டு பயணிக்கத் தொடங்கினோம்.

எனது பயணப்பட்டியலில் அடுத்து இருந்தது லலிதகிரி, ரத்னகிரி, உதயகிரி ஆகிய மூன்று பௌத்த வளாகங்கள்.  இந்தியத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ​புராதனச் சின்னப்பகுதியாக இவை உள்ளன.

2 மணி நேர பயணத்திற்குப் பின்னர் லலிதகிரியில் பதிவினைத் தொடங்கினோம். இப்பகுதியில் தொல்லியல் ஆய்வினை நிகழ்த்திய டாக்டர்.பட்னாயக்கும் உடன் வந்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் தான்.

மணல் மூடிக் கிடந்த குன்றினை அகழ்வாய்வு செய்ததில் கிடைத்த ஸ்தூபப் பகுதி - கண்கொள்ளாக் காட்சியாக இது உள்ளது. இந்த வளாகம் முழுக்க ஆங்காங்கே புத்த விகாரைகள் இருந்தமைக்கானச் சான்றுகள் நிறைந்துள்ளன. இடம் மிகப் பசுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது. கி.மு  2ம் நூற்றாண்டு காலகட்டத்திலான கட்டட அமைப்புக்கள் தொடங்கி கி.பி 13ம் நூற்றாண்டு வரையிலான கோயில் அமைப்புகள் உள்ளன. 

புத்தரின் படிமம் உள்ள 8 ஸ்தூபங்களில் இதுவும் ஒன்று என அறியப்படுகின்றது. அகழ்வாய்வில் கண்டெடுக்கபப்ட்ட  அப்படிமம் உள்ள சிறிய பேழை புவனேஸ்வர் அருங்காட்சியகத்தில் உள்ளது. 

அடுத்து அங்கிருந்து புறப்பட்டு உதயகிரி வந்தடைந்தோம். இங்குள்ள அருங்காட்சியகத்தின் பதிவுகளைச் செய்து கொண்டேன். இது மிகப் பெரிய வளாகம். பிரம்மாண்டமான கோயில் ஒன்று, அதனைச் சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய வடிவிலான விகாரைகள் என நிறைந்துள்ளன. 

இறுதியாக எனது பயணத்தில் இடம் பெற்றது உதயகிரி. மலைகள் சூழ்ந்த உயர்ந்த பகுதி. தேரவாதம், மஹாயனம், வஜ்ராயனம் ஆகிய 3 வகை பௌத்த பிரிவுகளும் இப்பகுதியில் செழித்து வளர்ந்திருந்தமையை இங்குள்ள வளாகம் சான்று பகர்கின்றது. அற்புதமான சூழல். எங்கு காணினும் சிதலமடைந்த பௌத்த விகாரைகள் என இது மிக ரம்மியமான சூழலை உருவாக்கியது.

ஒடிஷாவிலிருந்து கலிங்கர்கள் கிழக்காசியப் பகுதிக்கு பௌத்தத்தைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இலங்கை நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுக நகர்களிலிருந்து பௌத்த பிக்குகள் கிழக்காசியா  தூரக்கிழக்காசியா என பல இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சீனர்கள் வழக்கில் உள்ள புத்தர், அவலோகிதர், தாராதேவி சிற்ப அமைப்புடன் கூடிய ஆரம்பகால வடிவங்களை ரத்னகிரி பௌத்த வளாகத்தில் கண்டேன்.

இறுதியாக தாராபூர்  (Tarapur)  அகழ்வாய்வுப் பகுதிக்கு வந்து அங்குள்ள அருங்காட்சியத்தில் தகவல்கள் சேகரித்துக் கொண்டேன்.

பிரம்மாண்டங்களைத் தரிசித்த பிரம்மாண்ட சிந்தனை மனதில் ஆழப்படிந்து விட்டது. நான் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்கே சென்று விட்ட மன நிலையோடு திரும்பினேன். 

பேச வேண்டாம் என நினைத்தாலும் பேசிப் பேசி தொண்டைப்புண் மேலும் பெரிதாகி விட்டது. இன்றைய இரவு பேசாது ஓய்வெடுத்தல் தான் நாளை கொஞ்சமாவது பேசலாம் என்ற நிலை தான்  இப்போது.

-சுபா






Friday, March 16, 2018

Theon Hou Temple - சீன பௌத்த ஆலயம்



Theon Hou Temple - இது ஒரு சீன பௌத்த ஆலயம். தமிழகத்திலிருந்து மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஆய்வாளர்களில் சிலரை இன்று இக்கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தோம்.

மணிமேகலா தெய்வம் - அல்லது தாராதேவி அன்னைக்கு எழுப்பப்பட்டுள்ள கோயில் இது. புத்தரின் வெவ்வேறு வடிவங்களிலான சிற்பங்கள் சில இங்கு வைக்கப்பட்டுள்ளன. சீனர்களின் பண்டைய வழிபாட்டு அமசங்களும் இந்திய பௌத்த சமயக் கூறுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போன்ற ஒரு வடிவமாக இக்கோயிலைக் காணலாம். இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் பௌத்தம் பரவிய தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த மலேசியா போன்ற நாடுகளில் மாறுபட்ட வடிவங்களில் பௌத்த ஆலயங்கள் வழிபாட்டுக் கலாச்சாரத்தில் எவ்வாறு உள்ளன என்பதற்கு இக்கோயில் ஒரு நல்ல உதாரணம்.




Friday, August 25, 2017

பிள்ளையார்.. யார்..?

 


கௌத சன்னா

பல தோழர்கள் பிள்ளையாரைப் பற்றி விளக்கும்படி கேட்டுள்ளனர். அவர்களின் ஆர்வத்திற்காக இந்தச் சிறு விளக்கக் குறிப்பு. நேரம் வாய்க்கும்போது பிற்பாடு விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாக மனித உடல் மற்றும் மிருகங்களின் தலைகளை இணைத்து உருவங்களை வடிவமைப்பு செய்வது உலகின் பல 

பண்டைய பண்பாடுகளில் காண முடியும். பண்டைய கிரேக்கம், எகிப்து, உரோம் மற்றும் பல பண்பாடுகள்.. இந்தியாவில் குறிப்பாகத் தென்னகத்தின் கோயில்களில் யாளி என்கிற சிற்பத்தைப் பார்த்தால் அதற்கும் கணபதிக்கும் எந்த வேறுபாட்டையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. பக்தி மட்டுமே எல்லோர் கண்களையும்  மறைத்துவிடும்.

தமிழகத்திற்குப் பரஞ்சோதி மற்றும் நரசிம்மவர்ம பல்லவனால்  கொண்டுவரப்பட்ட கணபதி சிலை, வாதாபி கோட்டை வாயிலிலிருந்து பெயர்த்து கொண்டுவரப்பட்டது என்பது ஒரு வரலாற்றுச் செய்திதான்.  வாதாபி குகைகளில் உள்ள கணபதி சிலைகள் அதை ஓரளவுதான் உறுதி செய்கின்றன. (பார்க்க படம் 3)

வாதாபி கணபதி சிலைகள் தியானத்தில் அமர்ந்து லட்டு சாப்பிடுவதைப் போலவே  செதுக்கப்பட்டுள்ளன. எனவே பரஞ்சோதி கொண்டு வந்த சிலையும் லட்டு தின்கிறது.

இதற்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு...?

யானை என்பது புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரை உடன்வரும் ஒரு பாத்திரம். அவரது அம்மாவின் கனவில் வந்த வெள்ளை யானை, அவர் அடக்கிய நளகிரியானை, அவருடைய அஸ்திகளைக்  கொண்டுபோன அரச யானைகள் என்பதெல்லாம் ஒரு புறம் இருப்பினும், 

பெரும் பலத்தையும் பெரும் அமைதியையும் ஒருசேர பெற்றதுதான் யானை. அது எவ்வாறு தன்னை கட்டி ஆள்கிறது என்பதில்தான் அதன் பலமும் பெருமையும் அடங்கியிருக்கிறது. அதனால் யானையைப் பல இடங்களில் புத்தர் குறித்துக் காட்டியிருக்கிறார். எனவே யானை என்பது பௌத்தத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக உலகம் முழுமைக்கும் பரவியுள்ளது.

அதேபோல அரச மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்த புத்தர் சிலையும் அவரது சிந்தனையைக் குறியீடாக போதிக்கிறது. இதை சிதைக்கும் நோக்கில்தான் சைவ எழுச்சியின்போது புத்தரின் சிலைகளில் தலைகள் உடைக்கப்பட்டு. அதற்கு பதில் பல தலைகள் சேர்க்கப்பட்டன. அதில் ஒன்று யானைத்தலை.

அப்படி சேர்க்கப்பட்ட தலைகள் தியான நிலையில் லட்டு தின்றுக் கொண்டுள்ளபடி அமைக்கப்பட்டதை வாதாபி கணபதிகள் உறுதி செய்கின்றன. அந்தச் சிலைக்கு இரண்டு கைகள்தான். பிற்காலத்தில் மேலும் இரண்டு கைகள் சேர்க்கப்பட்டன.

இவையெல்லாம் யாளி என்னும் உறுப்பு சேர்க்கை வகை சிற்பங்களே. தியான புத்தருக்கு மாற்றாக கணபதி என்னும் யாளி.. 

படத்தில் உள்ளபடி...

முதல் படம் தியானத்தில் இருக்கும் புத்தர் யானையாக. (ஜப்பான்)

2 மற்றும் 3 வாதாபி பிள்ளையார். பூணூல் இருக்காது.

4, 5 & 8 தென்னிந்திய யாளி வகைகள் 

6 & 7. எகிப்து யாளி வகைகள்


Wednesday, January 25, 2017

சயன புத்தர் - பினாங்கு

 


பினாங்கு, சயன புத்தர் ஆலயத்திற்கு நேற்று காலை சென்றிருந்த போது எடுத்த சில புகைப்படங்கள் இவை.

இது  தாய்லாந்து புத்தம் அடிப்படையிலான வழிபாடு நடைபெறும் இடம். உலகின் 3 வது பெரிய சயன நிலை புத்தரின் சிலை இங்குள்ளது. 1845ம் ஆண்டு இது கட்டப்பட்டது.

இங்கே மத பேதமின்றி அனைத்து சமயத்தவரும் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வர்.